Wednesday, 9 December 2009

Calendar 2010


Thursday, 10 September 2009

From Kasu Sobhana with ......?

Dt 10/09/2009.
SHOW CAUSE NOTICE
Issued to: Shri K. G. Gouthaman.
Employee number KS 09/02
It is observed that you are indulging in anti-blog activities
and spreading rumour about our blog-spot and me in particular in other reputed blog-spots.
If you fail to explain in writing, the motive behind all these anti blog activities of you within a week, disciplinary action will be taken against you.


sd/ ---
Kasu Sobhana.
c.c engalblog@gmail.com 

Thursday, 23 July 2009

My current objective is ...

Hi Friends!
I am very much bent upon developing
http://engalblog.blogspot.com/
now.
Likely to return to this blog - once i am thrown out of that blogspot by
my boss, kasusobhana.
kggouthaman

Sunday, 5 July 2009

Sangeethamum Rasanaiyum

விரல் மீதிச் சுண்ணாம்பை விவரமாய்த்
தூணிலோ - சுவற்றிலோ தீற்றிவிடும்
சிவப்பு வாய்ச் சீமான்களே! - நீங்கள்
தேவைக்கு மேல் எடுத்தது ஏன்?


--------------------


ஆடாது அசங்காது வாவென்று - அந்தப் பாடகி
தலையை ஆட்டி ஆட்டிப் பாட;
அதை அவள் ஜிமிக்கிகளே மதிக்கலை!
அந்த மாயக் கண்ணனா மதிப்பான்?

-------------------


அந்தப் பாடகி உருகி உருகிப் பாடி
பக்தி, ராகம், லயம், ஸ்வரம் என்று
பன்முனைப் போர் தொடுத்ததும் -
உள்ளத்தைத் தொடவில்லை... ஆனால்
பின்னே வாய் மூடித் தம்புரா மீட்டும்
சிறுமியின் கண்களில் தெரியும்
கவிதைக்கு எல்லோரும் அடிமையானோம்!
----------------------

Tuesday, 30 June 2009

முதல் தோற்றம்

அந்த ஆரம்பப் பள்ளி நாட்கள்!
தேசிய ஆரம்ப பாட சாலை - ...குளம் வட கரை - நாகப்பட்டினம்.
முதல் வகுப்பு பற்றி பிறகு எழுதுகின்றேன்.
2 ஆம் வகுப்பு பற்றி இப்பொழுது எழுத நினைப்பது - என் முதல் பப்ளிக் அப்பியரன்ஸ் சம்பந்தமாக!
அந்த நாட்களில் - வகுப்புகளில் - நீள வாக்கில் வகுப்பின் இரு பக்கங்களிலும் 3 கால் பலகைகள் போடப் பட்டிருக்கும். ஒவ்வொரு பலகையும் 1' X 6' இருக்கும் என்று நினைக்கிறேன். சில வால் பையன் வகையறா - ஆசிரியர் இல்லாத அல்லது மாறும் நேரங்களில் - நடுக் காலின் மீது ஒருவன்அமர்ந்துகொண்டு - இரு ஓரங்களில் மேலும் 2 வால்கள் உட்கார்ந்து - வட்டமாக அந்த பலகைகளைச் சுழற்றி பேரின்பம் காண்பார்கள். வகுப்பாசிரியை அல்லது ஆசிரியர் வந்தவுடன் - இவர்களின் பெயர்கள் சிலேட்டில் மானிட்டரால் எழுதப் பட்டு - ஆசிரியரிடம் சமர்ப்பிக்கப் படும். ஆசிரியரின் mood க்குத் தகுந்தாற்போல் - அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.
வகுப்பு ஆசிரியை லில்லி புஷ்பம் (வில்லி புஷ்பம் என்பது பொருத்தமாக இருந்திருக்குமோ என்று எனக்கு இப்பொழுது தோன்றுகிறது) வெள்ளை சேலை, வெள்ளை இரவிக்கை, வெள்ளை கூந்தல், சதுர முகம், கோதுமை நிறம் - இவற்றோடு - கூலிங் க்ளாஸ் அணிந்த இவரை - நாகையில் 1950 களில் யாரும் பார்த்திருக்கலாம். (என் தங்கைக்கு - அணிலே அணிலே - ஓடி வா - ஞாபகம் வரக்கூடும்) வகுப்பாசிரியையின் வெண்கலக் குரலைக் கேட்டே - எங்கள் சப்த நாடியும் அடங்கிவிடும். அந்த நாட்களில் - அண்ணாதுரை போல் எழுந்து நின்று ஓர் விரல் காட்டி நின்றால் - அதற்கு, 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது போன்ற அனர்த்தங்கள் கிடையாது - இயற்கை அழைக்கிறது என்ற ஒரே அர்த்தம்தான்!
லில்லி புஷ்பம் டீச்சரிடம் - யாருமே விரலுயர்த்த மாட்டார்கள் - 90% of the time - அந்த டீச்சர் bad mood ல் தான் இருப்பார். மாணவிகளுக்கு மட்டும் பாசம் காட்டும் FCS. பையன் களை (அவர்கள் சக ஆசிரிய பெருமக்களின் ரத்தத்தின் ரத்தமானவர்களாக இல்லை என்றால்!) அவமானப் படுத்தும்படி கடுமையாகப் பேசி உட்கார வைத்து விடுவார். அதனால் உட்கார்ந்த இடத்திலேயே வடிவேலு செய்த மாணவர்கள் ஏராளம்.
எனக்கு வலது பக்கத்தில் 'தம்பி' என்று ஒரு பையன் - என் தம்பி அல்ல - யார் தம்பியோ அதுவும் தெரியாது. மிகவும் பயந்த சுபாவம்! பாவம்! - லில்லி வகுப்புகளில் - தம்பியினுடைய முகத்தில் திடீரென்று ஒரு uneasiness தோன்ற ஆரம்பிக்கும். விழிகள் பெரியதாக ஆரம்பிக்கும். அவனுடைய இடது கால் முட்டியால் டமால் என்று என் வலது முட்டியில் ஒரு இடி இடிப்பான்.
நான்: "என்னடா?"
அவன்: " 1 அடைக்குதுடா!"
நான்: "டீச்சர் கிட்ட கேளுடா"
அவன்: "கேட்டா விடுவாங்களாடா?"
நான்: "உம்..."அவன்: (மௌனம்)
3 நிமிடங்கள் - ஒன்றும் நிகழாது.
தம்பியினுடைய முகத்தில் மீண்டும் ஒரு uneasiness தோன்ற ஆரம்பிக்கும். விழிகள் பெரியதாக ஆரம்பிக்கும்.
அவனுடைய இடது கால் முட்டியால் டமால் என்று என் வலது முட்டியில் ஒரு இடி இடிப்பான்.
நான்: "என்னடா?"
அவன்: " 1 அடைக்குதுடா!"
நான்: "டீச்சர் கிட்ட கேளுடா"
அவன்: "கேட்டா விடுவாங்களாடா?"
நான்: "உம்..."
அவன்: (மௌனம்)
3 நிமிடங்கள் - ஒன்றும் நிகழாது.
என்றைக்காவது ஒரு நாள் அவன் கேட்டு, லில்லியும் அனுமதியளித்திருந்தால் - உடனே நானும் எழுந்து ஓர் விரல் காட்டலாம் என்று பார்த்தால் - அந்தத் தம்பி (மௌனப்) புரட்சிப் புயல் வைக்கோ போல புரட்சிப் பயல் சைக்கோ வாக - JJ வில்லியிடம் - வாலைச் சுற்றி வைத்துக் கொண்டு இருந்துவிட்டான்.ஒரே ஒரு முறை - நாலாங்கிளாஸ் சிண்டு வாத்தியாரின் உறவுப் பையனுக்கு அனுமதி கிடைத்தவுடன் - கிடு கிடு வென 7 அல்லது 8 பேர்கள் ஓர் விரல் உயர்த்தி வெற்றி நடை போட்டு வெளியேறினோம். உடனே தம்பிக்கும் வந்தது வீரம்! எழுந்தான், கேட்டான். அதற்குள் அந்த ஆசிரிய உறவுப் பையன் திரும்பி வந்து விட்டான் - எனவே லில்லி கூறினார் - " ஒரு ஆடு 1 போனால் ஒன்பது ஆடுகளும் போகணுமா? ச்சீ - உட்காருடா".
மதிய உணவு முடித்து எல்லோரும் வகுப்புக்கு வந்தவுடன், மதிய முதல் வகுப்பு - எப்பொழுதுமே - லில்லி வகுப்புதான். ஒவ்வொருவராகக் கூர்ந்து கவனிப்பார். எந்தப் பையங்களின் டிராயர் பாக்கெட் எல்லாம் - phenomenal ஆக இருக்கிறதோ அவர்களை அழைத்து table அருகே நிற்க வைத்து - ஒரு பார்வை பார்ப்பார் - அதற்குப் படியாவிட்டால் - பிரம்பைக் கையில் எடுத்து - அல்லது எடுப்பது போல் ஓர் ஆக்க்ஷன்! - அவ்வளவுதான் - பையன் கள் - வேக வேகமாக இரண்டு கைகளாலும் மாறி மாறி - பாக்கெட்களைக் காலி செய்து - வேர்க்கடலை, பர்ஃபி, இலந்தப் பழம், இலந்த வத்தல், (ஒரு பையன் ஒரு முறை இலந்தப் பாகு என்கிற வஸ்துவையும் - பாக்கெட்டில் ஊற்றிக் கொண்டு வந்திருந்தான்!) இத்யாதி இத்யாதி - மேஜை மீது குடியேறும்.
"நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன் - வெளியே விற்கின்ற பண்டங்கள் எல்லாம் வாங்கக் கூடாதுன்னு?" என்று கூறி, சிலருக்கு அடிகளும் கொடுத்து, கடுமையான எச்ச்ரிக்கைகளுக்குப் பின், "போ - போய் உட்கார்" என்று அனுப்பி வைப்பார்.
இதற்குப் பிறகு நடந்ததுதான் - என் வாழ் நாளில் நான் பெற்ற மிகப் பெரிய அனுபவப் பாடம். மேஜை மீது வைக்கப்பட்ட எல்லா திண்பண்டங்களும் ஒவ்வொன்றாக லில்லியின் வாய் வழியாக - தொப்பையை அடையும். "ச்சீ புளிக்குது; ஆஹா - நல்லா இருக்கு" என்பது போன்ற விமரிசனங்களுடன்!
இந்த லில்லி டீச்சரின் இன்னொரு பொழுது போக்கு என்ன என்றால் - மாணவ / மாணவிகளுக்கு மனக் கணக்கு போடுதல். அந்த நாள் தொடங்கி, ஐந்து வருடங்களுக்கு (அதாவது 7 ஆம் கிளாஸ் படிக்கும் பொழுது எமரால்டில் - என்ன - இது கூடத் தெரியலயா - என்று எக்யம் உக்கிரமாகப் பார்த்து பெரிய குரலில் பயமுறுத்திக் கொண்டிருந்த நாள் வரை) எனக்கும் கணக்கு ஒரு பிணக்குதான். கணக்கைப் பொருத்த வரையில் நான் ஒரு புண்ணாக்குதான் - இப்பொழுதுதான் ஏதோ excel தயவால் - பங்கு மார்க்கெட்டில் மெத்தமாக் 79 ஆயிரம் நஷ்டத்துடன் - 3 மாதம் முன் 119 ஆயிரமாக இருந்தது - தலை நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டு இருக்கிறேன்............. நின்றால் தலை சுற்றுமே!
...எங்கே விட்டேன்? - ஆம் - லில்லி மனக்கணக்கு.
கால்குலேட்டர் பற்றி எல்லாம் தெரியாத முண்டம் ஒன்றுதான் இந்த மனக்கணக்கு என்னும் கொடிய விஷயத்தைக் கண்டுபிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். (அந்த காலத்தில் கால்குலேட்டர் என்ற வார்த்தையே கண்டு பிடிக்கப்படவில்லை - நான் முதன் முதலாக் ஒரு கால்குலேட்டரை தொட்டுப் பார்த்ததே 1974ல் தான்) கணக்கு என்னவோ இப்பொழுது யோசித்துப் பார்க்கையில் அவ்வளவு பெரியதாகத் தோன்றவில்லை - ஆனால் - ஐந்தும் மூன்றும் எவ்வளவு போன்ற பெரிய பெரிய கணக்குகளை, எப்படி இந்த சக மாணவர்கள் போடுகிறார்கள் என்று நான் அதிசயித்துப் போவேன்! (2 ஆம் கிளாஸ் படிக்கும் பொழுது எனக்கு - serious infection marked by intestinal inflammation and ulceration; caused by Salmonella typhosa ingested with food or water -வந்ததால் - அதாவது டைபாயிட் வந்ததால் - நான் ஸ்கூல் செல்வது பெரிதும் தடைபட்டுப் போனது - டைபாயிட் வந்தாலும் சரி, வீட்டிற்கு ஊரிலிருந்து உறவினர்கள் வந்தாலும் சரி - நான் ஸ்கூலுக்கு மட்டம் போடுவேன் - அல்லது போடப்படுவேன்) இந்த லாங்க் லீவு சமயத்தில்தான் ஆசிரியர்கள் சதி செய்து கணக்குப் பாடத்தின் முக்கிய பல அயிட்டங்களை சக மாணவர்களுக்கு போதித்திருப்பார்கள் என்று நான் சந்தேகிக்கிறேன்!லீல்லியின் மனக் கணக்கு வகுப்பில் மேலும் ஒரு பயங்கரமான அமசம் என்ன என்றால் - அவர் கணக்கு கொடுப்பார். 1 நிமிடம் நேரம் தருவார்; யாரும் பேசக்கூடாது; சிலேட்டை எடு! எடுப்போம். "எழுது" எழுதுவார்கள் (நான் - யோசித்துக் கொண்டிருக்கையிலேயே - "கீழே வை") - நான் அவசர அவசரமாக போர்டில் கண்ணுக்கு படுகின்ற எண்ணையோ அல்லது யாராவ்து சொல்லிக் கொண்டே எழுதுகிற எண்ணையோ - அல்லது முருகனை நினைத்துக் கொண்டே ஒரு எண்ணையோ எழுதி வைப்பேன். டீச்சர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு இருப்பார். பையன் கள் ஒவ்வொருவராக போய் சிலேட்டைக் காட்ட வேண்டும். ஜயலலிதா 2 முட்டை போட்டார்; கருணாநிதி 3 முட்டை போட்டார் - ஹூம் இவர்கள் எல்லாம் எம்மாத்திரம் - லில்லி எனக்கு அந்த காலத்திலேயே 10 முட்டைகளுக்குக் குறைவில்லாமல் போட்டிருக்கிறார்! - அது மட்டுமா - நான் தயக்கமாக அவரை நோக்கி நடக்க ஆரம்பிக்கையில் - "டேய் - திருவாரூர் தேர் அசைந்து வருதுடா" - என்று சொல்லுவார் - எலோரும் 'கொல்' என்று சிரிப்பார்கள்!!
எனவே - நண்பர்களே - நான் 10 / 20 பேருக்கு முன் public appearance ஆனதும் பிரபலம் ஆனதும் 2 ஆம் வகுப்பு படிக்கும் பொழுதுதான் - நன்றி கூற வேண்டியது லில்லி புஷ்பம் டீச்சருக்குத்தான்!

Friday, 26 June 2009

மைகேல் ஜாக்சன்

I cannot say I am a great admirer of MJ, though some (which means many barring an equal many ) of his dance steps have been astonishingly fluid and graceful. But a few of them have been quite obscene and a few others were quite stupid, like vigorously working on a hand pump in water starved Nanganallur! I abhor his excessive attention to his outward appearance and complexion and the hundreds of surgeries he went through and scores of pills and injections he suffered to look more handsome or more fair complexioned. It is his music and dance that were really his strength but he thought he has not done it all till he looked what he preferred to look like. When people get abundantly rich in the fine arts category they become jittery reclusive, frightened alone and aloof. Huge wealth does not distort the mind of a balanced person like a Narayanamurthy or you-know-whos. In some cases the women these rich scions marry had been undoing of many a billionaire. I do not know if these stinking rich class has restful sleep when they suffer from their special problems. If I have a small and insignificant worry, I lose lot of sleep. I still wonder how people can live with murders and cheating at the back of their minds. Wealth and popularity has not given peace to people like Michael Jackson, Elvis Presley or Howard Hughes. But there are few like Bill Gates who enjoy their immense prosperity by doing meaningful charity work. Our scions are inclined to donate diamond crowns to already rich temple deities. Not for them medicines for the poor or education for the unlucky.
K G Yagnaraman.

Thursday, 25 June 2009

பயணக் கட்டுரை 01

தெய்வ தரிசனம் 01
இது என் முதல் முயற்சி. நீங்கள் எல்லோஒரும் உடனே இதுவே கடைசி முயற்சியாகவும் ஆகுக என கூறுவீர்கள் அல்லது கூவுவீர்கள் என்று நினைக்கின்றேன்! நான் விடுவதாக இல்லை; யாரும் தப்பிக்க முடியாது - விதி வலியது.

என் முதல் வணக்கம் - விநாயகருக்கு!

நம்முடைய இந்தப் பதிவில் என்னவெல்லாம் செய்யலாம் என்பது பற்றி தற்போ தைக்கு திட்டங்கள் எதுவும் இல்லை. அப்படியே இருந்துவிடவும் முடியாது. கேள்விகள் கேட்க நினைப்பவர்கள் - அனுப்பலாம். இல்லையேல் நானே கேட்டு நானே பதில் எழுத வேண்டும்- அதை நானே படித்து நானே இரசித்து - நானே சிரித்து.. .. தேவைதானா இந்த நிலை?

சமீபத்தில் நாங்கள் (kgg & brothers - தியாகு, KGY, KGV) விசிட் செய்தது - வல்லக்கோட்டை & ஸ்கந்தாஸ்ரமம். வல்லக்கோட்டை தாம்பரத்திற்கு தென் மேற்கில் அல்லது கிழ மேற்கில் அல்லது தென் வடக்கில் அல்லது கதம்பமாக இந்த எல்லா திசைகளிலும் சேர்ந்து 28 KM தூரத்தில் அமைந்துள்ளதாக நாங்கள் நினைக்கின்றோம் . அது சரிதானா இல்லையா என்பதை நீங்கள் அனைவரும் ஒரு முறை சோ தனை செய்து தெரிந்து கொள் வது நல்லது. வல்லக்கோட்டை கோ யில்1200 வருடங்கள் பழமையானது. அங்கு உள்ள ஒருவர், அந்த கோ யில் மூலவர் விக்கிரகமும், திருப்பதி மூலவர் விக்கிரகமும் - ஒரே ஸ்தபதியால் ஒரே கால கட்டத்தில் செய்யப்பட்ட விக்கிரகங்கள் என்று கூறினார். திருப்பதி கோ யில் வரலாறு எனக்கு தெரியாது என்பதால், இது பற்றி பிறகு சிந்திக்கலாம் என்று நான் நினைத்தேன். மற்றவர்கள் என்ன நினைத்துக் கொ ண்டிருந்தார்களோ - அல்லது பசி மயக்கத்தில் கவனிக்காமல் விட்டார்களோ - அல்லது பசி (அவர்கள்) காதை அடைத்து விட்டதோ - எனக்கு தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும், நான் ஒவ்வொ ரு முறையும் ஒரு வேண்டுதலுடன் வல்லக்கோட்டை செல்வேன். அந்த வேண்டுதல்ஓர் ஆண்டுக்குள் நிறைவேறி விடுகின்றது. (நடை பயணமும் உண்டு; கார் பயணமும் உண்டு)

தயவு செய்து - இந்த கோ யில் குளத்தில் குளிக்கின்ற ரிஸ்க் மட்டும் வேண்டாம் - நான் உங்களை மன்றாடி கேட்டுக் கொ ள்கிறேன். இந்த கோ யிலின் அருள் பிரசாதங்களில், KGV க்கு பிடித்த - தட்டை என்கின்ற - மி ளகு வடை என்கின்ற ஒரு சமாச்சாரத்தை மட்டும் வேண்டிய வரையில் வாங்கிக் கொ ண்Î கிளம்பினோ ம்.

வல்லக்கோட்டை கோயில் எவ்வளவுக்கெவ்வளவு பழமையானதோ - அவ்வளவுககவ்வளவவு புதியது - ஸ்கந்தாஸ்ரமம் கோ யில்கள் - ஆம் - ஒரு காம்பவுண்டுக்குள் - பல சாமி (சிலை)கள் - சமீப கால படைப்புகள் - கடவுள் மனிதனைப் படைத்தானோ இல்லையோ - மனிதர்கள் கடவுளை இங்கு அழகழகாகப் படைத்திருக்கிறார்கள்.


ஸ்கந்தாஸ்ரமம் - நேரில் சென்று பார்க்க விரும்புபவர்கள் - தாம்பரம் கேட் அல்லது சுரங்க வழியாக சேலையூர்போ ய், காம்ப் ரோ ட் நுழைந்து பிறகு இடம் திரும்பி - பிறகு வலம் திரும்பி - வழி காட்டி பலகைகளையோ - ஆட்டோ ஓட்டுனர்களையோ நம்பி - நிச்சயம் சென்று வரலாம் - நாங்கள் உத்தரவாதம்.

த. சத்ய நாராயணன் - அயன்புரம் தவிர்த்து - மற்றவர்களின் கருத்துக்கள் - வரவேற்கப் படுகின்றன.

அன்புடன் KGG

Monday, 22 June 2009

திசையறியா நிலை

ஆரம்பப் பாட சாலையும், ஆசிரிய, ஆசிரியைகளும் எப்பொழுதுமே நம் நினைவில் தங்கி(விடும்; விடுவார்கள்).. மூன்றாம் வகுப்பிலோ அல்லது நான்காம் வகுப்பிலோ - ஒரு பாடம்.

பாட ஆரம்பத்தில் ஒரு சிறுவன் - அரை டிரௌசருடன், கைகளை - அம்பயர் WIDE சொல்வது போல் காட்டியபடி - நின்று கொண்டு, அவனருகே - என்ன காரணமோ - ஒரு சேவல் படமும் இருக்கும்.

பாடத்தின் பெயர் : திசைகள்.

சின்ன வயதில் - இந்த பாடம் என்னைக் குழப்பிய அளவிற்கு வேறு எதுவும் குழப்பியிருக்க முடியாது!

" சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"

இதில் ஏதும் குழப்பம் இல்லை.

நாம் தினமும் காலையில் எழுந்திருந்து, சூரியனைப் பார்த்தபடி நின்றோமானால், நம் முகத்துக்கு முன்னே இருப்பது கிழக்கு.

ஹும் .... சிறிய குழப்பம் ஆரம்பம்.

காலையில் பாயில் சுருண்டு படுத்திருந்தவனை - வனமாலினி (அக்கா) தண்ணீர் முகத்தில் தெளித்து, "இப்பொழுது எழுந்திருக்கவில்லை என்றால் - அடுத்தது ஒரு அண்டா தண்ணி வரும்" என்ற எச்சரிக்கையைக் கேட்டு, மருண்டு, உருண்டு எழுந்த பின், 'சூரியன் எங்கே?' - என்று கேட்க - அதை சரியாகக் கவனிக்காத அக்கா - 'எல்லாம் நீ ராத்திரி எங்கே வச்சியோ அங்கேதான் இருக்கும்' என்று சொல்வாள்.

சரி நாமே தேடிக் கண்டுபிடிப்போம் என்று துணிந்து வெளியே வந்து பார்த்தால் - வீட்டுக்கு முன்னே சட்டயப்பர் கோவில் மதிள் சுவர்தான் தொ¢யும். நம் புத்தகத்தில், "நாம் தினமும் காலையில் எழுந்திருந்து, சூரியனைப் பார்த்தபடி நின்றோமானால், நம் முகத்துக்கு முன்னே இருப்பது கிழக்கு" என்றுதானே போட்டுள்ளது; எழுந்திருந்தவுடன் சூரியனைப் பார்த்தபடி எப்படி நிற்பது?

வாசலுக்கு வரலாமா அல்லது கூடாதா? என்று மிகச் சிறிய சந்தேகங்கள்.

சரி - இந்த அற்ப சந்தேகங்கள் நிவர்த்தியானால் கூட -

சூரியனை நான் மதிள் சுவருக்கு அந்தப் பக்கம் ஸ்பாட் செய்து, அவருக்கு நேரே முகத்தை வைத்துக் கொள்ளும் பொழுது -

மேலும் சில சந்தேகங்கள். அவையாவன:

1) என் முகத்திற்கு நேரே இருப்பது கிழக்கு என்றால், காலுக்கு நேரே இருப்பது? கைகளுக்கு நேரே இருப்பது?

2) அதோ பக்கத்து வீட்டு தண்டு நிற்கிறானே - அவன் முகத்திற்கு முன்னே இருப்பது?

3) ஓரு வேளை - இந்த சட்டயப்பர் கோவில் சுவர்தான் கிழக்கோ?

KGS வந்து தலையில் ஒரு குட்டு வைத்தவுடன் - உழக்கு இரத்தம் வரும் முன்னே கிழக்கு முழுவதும் விளங்கிவிட்டது.

அடுத்த கட்டம்:

"நம் பின் பக்கம் இருப்பது மேற்கு"

ஆஹா - ஆரம்பிச்சுட்டான்யா - ஆரம்பிச்சுட்டான்....

மேலே கண்ட 1,2,3 கேள்விகளில், முகத்திற்கு பதில் முதுகும், சட்டயப்பர் கோவில் சுவருக்கு பதிலாக - கொல்லைப் பக்கத்து சுவரும், தண்டு விற்கு பதிலாக - நாகராஜ ஐயராத்து ஸ்ரீ ராமும் போட்டுக் கொள்ளுங்கள்.

என்னுடைய குழப்பங்கள் - உங்களுக்கும் வரும்.

இப்பொழுது நம் பின் பக்கம் இருக்கும் திசையைப் பார்க்க நம் முகத்தைத் திருப்பினால்,

கிழக்கு அங்கேயே இருக்குமா - அல்லது முகத்துக்கு எதிரே - அதுவும் திரும்பி - மேற்கைப் பார்க்கவிடாமல் செய்துவிடுமா?

அதையும் தவிர, தலை 180 டிகிரி திரும்பாதே!

K G Subramanian வருவதற்குள் விடை காண்பது அறிவு...

அதற்கும் அடுத்த கட்டம்:

நம் இடக்கைப் பக்கம் வடக்கு;

வலக்கைப் பக்கம் தெற்கு.

இந்த வாக்கியங்களை நான் எத்தனை முறைகள் கடம் அடித்தாலும்,

"நம் இடக்கைப் பக்கம் வலக்கு"

"வலக்கைப் பக்கம் இடக்கு"

"இலக்கைப் பக்கம் வலக்கு"

"வடக்கைப் பக்கம் இலக்கு"

என்றெல்லாம் - permutation's and combination's தான் வரும் - சரியாக வராது.

இவற்றுக்கும் மேலே சென்றால் - அது இன்னும் காமெடி!

"வடக்குக்கும் கிழக்குக்கும் நடுவே இருப்பது வடகிழக்கு"

ஏன் கிழ வடக்கு இல்லை?

"தெற்குக்கும் கிழக்குக்கும் நடுவில் இருப்பது தென்கிழக்கு"

ஏன் கிழ தெற்கு இல்லை?

Similarly -----

ஏன் மேல் தெற்கு இல்லை?

ஏன் மேல் வடக்கு இல்லை?

திசைகள் சுற்றிச் சுற்றி இப்படிக் குழப்புவதால்,

நமக்கு கிழக்கு மேற்கு மட்டுமே சுலபமாக விளங்குவதால்,

நான் கீழ்க் கண்ட 8 திசைகளை சிபாரிசு செய்கிறேன்:

1) கிழக்கு

2) மேற்கு

3) மேல் கிழக்கு

4) கிழ மேற்கு

5) மேல் கிழ கிழக்கு

6) கிழ கிழ மேற்கு

7) கிழ மேல் மேற்கு

8) மேல் மேல் கிழக்கு.

அன்புடன்

கௌதமன்.

Monday, 13 April 2009

ஆரம்பம் 01

தமிழ் அறிந்த மக்களுக்காக இது!