Sunday 5 July, 2009

Sangeethamum Rasanaiyum

விரல் மீதிச் சுண்ணாம்பை விவரமாய்த்
தூணிலோ - சுவற்றிலோ தீற்றிவிடும்
சிவப்பு வாய்ச் சீமான்களே! - நீங்கள்
தேவைக்கு மேல் எடுத்தது ஏன்?


--------------------


ஆடாது அசங்காது வாவென்று - அந்தப் பாடகி
தலையை ஆட்டி ஆட்டிப் பாட;
அதை அவள் ஜிமிக்கிகளே மதிக்கலை!
அந்த மாயக் கண்ணனா மதிப்பான்?

-------------------


அந்தப் பாடகி உருகி உருகிப் பாடி
பக்தி, ராகம், லயம், ஸ்வரம் என்று
பன்முனைப் போர் தொடுத்ததும் -
உள்ளத்தைத் தொடவில்லை... ஆனால்
பின்னே வாய் மூடித் தம்புரா மீட்டும்
சிறுமியின் கண்களில் தெரியும்
கவிதைக்கு எல்லோரும் அடிமையானோம்!
----------------------

6 comments:

Anonymous said...

KGG Sir,,

Very nice..

:)

Keep it up!

கௌதமன் said...

நன்றி ராதை.

- இரவீ - said...

//விரல் மீதிச் சுண்ணாம்பை விவரமாய்த்
தூணிலோ - சுவற்றிலோ தீற்றிவிடும்
சிவப்பு வாய்ச் சீமான்களே! - நீங்கள்
தேவைக்கு மேல் எடுத்தது ஏன்?//

இதை தான் சுண்ணாம்பு தடவுற கேல்வினு சொல்லுவாங்களோ???

அனைத்தும் அருமை அய்யா...

வல்லிசிம்ஹன் said...

நாம் ஆடினால் அவன் எப்படி வருவான்:)
நாம் ஆடாமல் பாடினால் அவன் ஆடி ஆடி வருவான். நல்ல கற்பனை கௌதமன்.

கௌதமன் said...

நன்றி இரவீ

வல்லிசிம்ஹன் said...

Hope this comment reaches you:)
If the singer is totally involved in seeking Krishna's presence, HE may come.
If the singer is only interested in prooving her skills
Krishna will listen and not show himself up:)